பண்டிகை காலத்தை முன்னிட்டு போதிய அளவு மதுபானங்களை இருப்பில் வைக்க டாஸ்மாக் உத்தரவு
பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுபானங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் தற்போது 4,829 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களுடன் ஒப்பிடுகையில் பண்டிகை நாட்களில் விற்பனை கணிசமாக அதிகரிக்கும்.
அந்த நிலையில், இந்த ஆண்டில் வார இறுதி விடுமுறை தினங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை தொடர்ந்து வருவதால் மதுபானங்களை போதிய அளவில் கையிருப்பில் வைக்கவும், சுற்றுலா தளங்களில் பயணிகள் எண்ணிக்கை உயரும் என்பதால் கூடுதல் இருப்பு வைக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக அளவில் விற்பனையாகும் மதுபான வகைகளின் அளவினை கணிசமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.