கோவை மாநகரில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் வி தி லீடர்ஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோயம்புத்தூர்: கோவை மாநகர் மாவட்டத்தில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் மக்கள் தலைவர் கே.அண்ணாமலையின் ‘WE THE LEADERS’ (வி தி லீடர்ஸ்) அமைப்பின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. களப்போராளி பாலாஜி உத்தமராமசாமியின் ஆலோசனையின்படி மாநிலம் தழுவிய அளவில் இந்த முகாம்கள் தீவிரமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேடு பகுதியில் உள்ள 53-ஆவது வார்டுக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் புதிய அரசியல் மாற்றுக்காகத் தங்களை மிக ஆர்வத்துடன் இந்த அமைப்பில் இணைத்துக் கொண்டனர். லட்சுமிபுரத்தில் திரண்ட இந்த அதிகப்படியான பொதுமக்களின் பேராதரவு, வரும் காலங்களில் தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றத்திற்கான ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்திருப்பதாகப் பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.




