பாஜகவிலிருந்து விலகும் முடிவில் அண்ணாமலை: டெல்லியில் அமித் ஷா நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வி?
புதுடெல்லி: பாஜகவிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இன்று 3-ஆவது நாளாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவரைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தொடர் சமாதான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இருப்பினும், டெல்லி தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பிரமுகர்களின் இந்த சமாதானத் திட்டங்களை அண்ணாமலை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் கட்சித் தலைமையின் சமாதான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாளை தனது பிறந்தநாளையொட்டி அண்ணாமலை தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்த புதிய அதிரடி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.






