பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரனுக்கும் அழைப்பு!
புதுடெல்லி:
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் இன்று டெல்லி விரைந்துள்ளார். முன்னதாக, டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அண்ணாமலை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லிக்கு வருமாறு மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார். இந்த அவசர அழைப்பை ஏற்று நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ள நிலையில், இன்று அவர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





