பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் இந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கிறது மத்திய அரசு!
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தைப் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வரும் சூழலில், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை வழி விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்குச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தவெக தலைவர் ஜோசப் விஜய் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தற்போதைய சூழலில், பரந்தூர் விமான நிலையத்தின் அவசியம் மற்றும் சர்வதேச விமான சேவை விரிவாக்கம் தொடர்பான விரிவான திட்ட ஆய்வறிக்கையை (DPR) இந்த மாத இறுதியில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், இந்திய விமான நிலைய ஆணையமும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இதனால் இத்திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




