இளம் டென்னிஸ் வீரர்களை ஊக்குவிக்கும் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம்

Date:

இளம் டென்னிஸ் வீரர்களை ஊக்குவிக்கும் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம்

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடருக்கு பஜாஜ் குழுமம் பிளாட்டினம் ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதனுடன், வளர்ந்து வரும் இளம் டென்னிஸ் திறமைகளை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து ‘தி நெக்ஸ்ட் லெவல்’ என்ற புதிய திட்டத்தையும் பஜாஜ் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் பஜாஜ், மற்றும் சர்வதேச டென்னிஸ் நட்சத்திரங்களான குரோஷியாவின் டோனா வெகிக் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தேர்வு செய்யும் 10 இளம் வீரர், வீராங்கனைகள் பயிற்சி, தொழில்முறை வழிகாட்டல் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெறவுள்ளனர்.

அத்துடன், பயிற்சி முகாம்கள், டென்னிஸ் உபகரணங்கள், பயணச் செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்காக மூன்று ஆண்டுகள் முழுவதும் பஜாஜ் குழுமம் நிதி உதவியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு...

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவரை ‘துரோகி’ என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது – ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்

நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவரை ‘துரோகி’ என கூறுவது ஏற்றுக்கொள்ள...

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: புதிய காலகட்டத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: புதிய காலகட்டத்தைத் தொடங்கிய பிரதமர்...

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: இலக்கை எட்டிய பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: இலக்கை எட்டிய பிரதமர் மோடி இந்தியாவிலிருந்து...