சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரம்மாண்ட ரோடு ஷோ: என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், தேர்தலில் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற எழுச்சிமிகு ரோடு ஷோ நிகழ்வில், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் வளர்மதி மற்றும் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் அசோக் ஆகியோருக்கு ஆதரவாக அவர் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.




