அம்பேத்கர் பிறந்த நாள் – நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை!
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பான முறையில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்குள் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கும் தலைவர்கள் அனைவரும் மலர்தூவி தங்களது மரியாதையைச் செலுத்தினர்.




