• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

வங்கக் கடலில் உருவாகும் புயல் – சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

athibantv by athibantv
அக்டோபர் 27, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 363 📋

வங்கக் கடலில் உருவாகும் புயல் – சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறவுள்ளதாகவும், அதன் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Related posts

தேர்தல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்திய புகார்: விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

தேர்தல் ஆதாயத்திற்காகக் குழந்தைகளைப் பயன்படுத்திய புகார்: விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

ஏப்ரல் 30, 2026
“3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு கட்டாயம்” – அரசாணையை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு கட்டாயம்” – அரசாணையை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏப்ரல் 30, 2026

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு–தென்கிழக்கே 780 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.27) தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்து, நாளை தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இது ஆந்திரா கடலோரப் பகுதிகளில், குறிப்பாக மசூலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும் வாய்ப்பும் உள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90–100 கி.மீ., சில நேரங்களில் 110 கி.மீ. வரை அடையக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கு அரபிக் கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (அக்.27):

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (அக்.28):

திருவள்ளூரில் மிக கனமழை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ஜி.டி. நாயுடுவாக மாதவன்: ‘ஜி.டி.என்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் விதிகள் – விரிவான விளக்கம்

Next Post

கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் விதிகள் – விரிவான விளக்கம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!

ஏப்ரல் 30, 2026
பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

ஏப்ரல் 30, 2026
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு!

ஏப்ரல் 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!
  • பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!
  • கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!

ஏப்ரல் 30, 2026
பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 7 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு!

ஏப்ரல் 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN