“அறிவாலயம் காமவெறி பிடித்த மிருகங்களை வளர்க்கும் கூடாரமாகிவிட்டது” – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!
சென்னை: கிருஷ்ணகிரியில் இரண்டு வயது பெண் குழந்தை, திமுக இளைஞரணி கிளைச் செயலாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஐந்தாண்டுகளில், “திமுககாரன்” என்ற அடைமொழியும், ஆளுங்கட்சி கர்வமும் ஊட்டி வளர்க்கப்பட்டதன் விளைவாகவே இத்தகைய கொடூரங்கள் நடப்பதாக அவர் சாடியுள்ளார். பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்காமல் பாலியல் இச்சையில் வேட்டையாடும் கொடூர மிருகங்களை வளர்த்துவிடும் கூடாரமாக அறிவாலயம் மாறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், தற்போதைய ஆட்சி ஒழிய வேண்டும் என்றும் அவர் அந்தப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.