தேர்தல் ஆணைய உத்தரவு: தடை கோரிய மனு நிராகரம்

Date:

தேர்தல் ஆணைய உத்தரவு: தடை கோரிய மனு நிராகரம்

சென்னை: சில அரசியல் கட்சிகளின் பதிவுகளை நீக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாதது உள்ளிட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி, நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 474 அரசியல் கட்சிகளின் பதிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் ரத்து செய்தது. தமிழகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டன.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க இயலாது என தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு

மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு தமிழகம், புதுச்சேரி...

Jeffrey Epstein விவகாரம்: சமூக ஊடகங்களில் பரவும் ‘மனித மாமிசம்’ குறித்த குற்றச்சாட்டுகள்

Jeffrey Epstein விவகாரம்: சமூக ஊடகங்களில் பரவும் ‘மனித மாமிசம்’ குறித்த...

கோவை மக்களை அவமரியாதையாகப் பேசிய தயாநிதி மாறனுக்கு கண்டனம்

கோவை மக்களை அவமரியாதையாகப் பேசிய தயாநிதி மாறனுக்கு கண்டனம் திமுக கூட்டத்தில் கோவை...

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்: இரவு முழுவதும் பேருந்தில் அவதி என குற்றச்சாட்டு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்: இரவு முழுவதும் பேருந்தில் அவதி என...