“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசு நிர்வாகம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அவர்கள் முன்வைத்த கருத்துகளுக்கு, “எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார்” என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (AIADMK IT Wing) தற்போது மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து தங்களது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக ஐடி விங், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கக் காவல்துறைக்கு வெறும் அதிகாரிகளை மட்டும் நியமித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. தவெக ஆட்சியில் அண்மைக் காலமாக நடந்து வரும் குற்றங்கள், மர்ம மரணங்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல் குறிதெல்லாம் கொஞ்சம் கூட விஜயின் முகத்திலோ அல்லது அவரது பேச்சிலோ கவலை தெரியவில்லை என்றும், அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்ற குறைந்தபட்சப் பொறுப்பு கூட அவரிடம் வெளிப்படவில்லை என்றும் சாடியுள்ளது.
டயலாக் டெலிவரியால் பொய் உண்மையாகாது: தொடர்ந்து தவெக தலைவரின் பேச்சு பாணியை விமர்சித்துள்ள அதிமுக, “மேடைகளில் கத்திப் பேசினாலோ அல்லது தங்களது பழைய ‘கத்தி’ திரைப்பட டயலாக் மாடுலேஷனில் (Modulation) சத்தம் போட்டுப் பேசினாலோ நீங்கள் சொல்லும் பொய்கள் எல்லாம் ஒருபோதும் உண்மையாகிவிடாது” என்று சாடியுள்ளது.
மேலும், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசியல் அரங்கில் நடத்தத் தொடங்கியுள்ள குதிரைப் பேரத்திற்கு, அமமுக (AMMK) எம்.எல்.ஏ கையெழுத்திட்ட விவகார வீடியோவே மிகச் சிறந்த சாட்சியாக பொதுவெளியில் உலா வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. “நீங்கள் கோட் (Coat) சூட் போடுங்கள் அல்லது போயஸ் கார்டனிலேயே வீடு கூட வாங்கிக் கொள்ளுங்கள், அதைப்பற்றி இங்கு யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை; உலகமே தங்களைச் சுற்றியே இயங்குவது போல் எப்போதும் நசநசவென்று புலம்பிக்கொண்டு இருக்காதீர்கள்” என்று மிகக் காரசாரமான வார்த்தைகளால் அதிமுக ஐடி விங் தங்களது கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளது. தவெக – அதிமுக இடையே தற்போது இணையத்தில் வெடித்துள்ள இந்த நேரடி மல்லுக்கட்டு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




