வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு
வங்கதேசத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான அமெரிக்க இறக்குமதி வரி, 37 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காட்டாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அமெரிக்கா மேற்கொண்ட இந்த வரி தளர்வு முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர வரி தளர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தம் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், அதன் முடிவாக வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி விகிதம் 37 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் முகமது யூனுஸ் விளக்கமளித்துள்ளார்.