கூட்டணி ஆலோசனைக்கான குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் காத்திருப்பு
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க குழு அமைத்து, கடந்த 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக விருதுநகர் மக்களவை உறுப்பினர் மணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த டிசம்பர் 3-ம் தேதி கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டதாகவும், ஆனால் திமுக இதுவரை அதற்கான குழுவை உருவாக்கவில்லை என்றும் கூறினார்.
திமுக எப்போது பேச்சுவார்த்தை குழுவை அறிவிக்கிறதோ, அப்போது கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை கடுமையாக விமர்சித்த மணிக்கம் தாகூர், போட்டித் தேர்வுகளுக்காக நீண்ட காலமாக தயாராகி காத்திருந்த மாணவர்களின் எதிர்காலமும் நம்பிக்கையும் இந்த முடிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டார்