• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

பரபரக்கும் அரசியல் களம்: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக

athibantv by athibantv
பிப்ரவரி 22, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 📋

பரபரக்கும் அரசியல் களம்: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது திராவிட முன்னேற்ற கழகம்

நடைபெற உள்ள 17வது சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் 2021ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் பெரும்பாலும் மீண்டும் இணைந்துள்ளன. கூடுதலாக, மக்கள் நீதி மய்யம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவை கூட்டணியில் இணைந்துள்ளன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக திமுக சார்பில் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

ஏப்ரல் 13, 2026

இந்த நிலையில், திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. முதல் நாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது அதிகாரப்பூர்வ கலந்துரையாடல் என்றாலும், முன்பே மூத்த அமைச்சர்கள் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியுடனும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால், இன்றைய அதிகாரப்பூர்வ சந்திப்பில் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறப்படலாம் என கூறப்படுகிறது. திமுகவிடம் 5 தொகுதிகளை கோர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானித்துள்ளதாக தகவல் உள்ளது.

மதிமுகவுடன் நாளை பேச்சு:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உடன் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கோர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சி உடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
வரும் 26ஆம் தேதி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக கலந்துரையாட உள்ளது. இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கோர மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவர்களும் இரட்டை இலக்க தொகுதிகளை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் இரட்டை இலக்க தொகுதிகளை கோருவதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என்பது தெளிவாகும். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

சாத்தியமான தொகுதி ஒதுக்கீடு:
இந்த முறை திமுக கூட்டணியில், காங்கிரஸ் – 28, தேமுதிக – 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6, மதிமுக – 6, விடுதலை சிறுத்தைகள் – 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு – 2, மனிதநேய மக்கள் கட்சி – 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சி – 1 என ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 167 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடும் என கூறப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

மதுரையில் போஸ்டர் யுத்தம்: “கொள்ளைக்காரர்களிடம் அடிபணிவோமா?” – திமுகவை மறைமுகமாகச் சீண்டும் காங்கிரஸ்!

Next Post

“அரசா? தரிசா?” – 10 லட்சம் கோடி கடனை வைத்துக்கொண்டு ரூ. 5,000 தேவையா? சீமான் ஆவேசக் கேள்வி!

Next Post

"அரசா? தரிசா?" - 10 லட்சம் கோடி கடனை வைத்துக்கொண்டு ரூ. 5,000 தேவையா? சீமான் ஆவேசக் கேள்வி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

ஏப்ரல் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!
  • “உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!
  • வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN