அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு – பெண் சாலை மறியல்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாகக் கூறி பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வினிதா என்பவர், நத்தம் செல்ல அரசு பேருந்தில் ஏற முயன்ற போது, அந்த பேருந்து நத்தம் செல்லாது என நடத்துநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வேறு பேருந்தில் பயணம் செய்து நத்தம் பேருந்து நிலையத்தில் இறங்கினார்.
ஆனால், அங்கு அவர் ஏற முயன்ற அதே பேருந்தே நத்தம் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நடத்துநரிடம் விளக்கம் கேட்டபோது, முறையான பதில் அளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து வினிதாவும், அவரது உறவினர்களும் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.