டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அன்னை அபிராமி நகர் சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு மதுபானக் கடை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
கோயில்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே மதுபானக் கடை அமைப்பது சமூக நலனுக்கு எதிரானது எனக் கூறிய அவர்கள், அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.