அம்பத்தூர் பகுதியில் ஆந்திரா நோக்கி கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது
சென்னை அம்பத்தூர் அருகே, ஆந்திர மாநிலத்துக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அத்திப்பட்டு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் அரசின் ரேஷன் அரிசி சுமார் 15 டன் அளவில் ஏற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், லாரி ஓட்டுநர் மகாராஜன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.