S.I.R படிவங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 11 வரை நீட்டிப்பு

Date:


S.I.R படிவங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 11 வரை நீட்டிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழங்கப்படும் S.I.R (Special Intensive Revision) படிவங்களை தாக்கல் செய்யும் இறுதி தேதி டிசம்பர் 11 வரை வாக்காளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. மாநிலத்திலுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், சுமார் 6.23 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

படிவங்களை பெற்றுள்ள வாக்காளர்கள், அவற்றை பூர்த்தி செய்து, தங்களுக்குப் பொறுப்பான பிஎல்ஓ-விடம் அல்லது அருகிலுள்ள வாக்காளர் உதவி மையத்தில் டிசம்பர் 11ஆம் தேதி வரை ஒப்படைக்கலாம்.

பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பின், அவற்றில் இடம்பெறும் விவரங்களின் அடிப்படையில், டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும்.

பின்னர், அனைத்து கோரிக்கைகளும், புகார்களும் ஆராய்ந்த பிறகு, இறுதிவாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சரிவில் இண்டிகோ – அவஸ்தையில் பயணிகள்: நாட்டின் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

சரிவில் இண்டிகோ – அவஸ்தையில் பயணிகள்: நாட்டின் விமானப் போக்குவரத்து கடுமையாக...

நிதி முறைகேடு விசாரணை – அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகள் ‘ஈடீ’ துறையால் உத்தரவு பிறப்பித்து முடக்கம்!

பெரும் அளவிலான நிதி திருப்பிச் செலுத்தல் ஒழுங்குக்கேடு தொடர்பான விசாரணையின் ஒரு...

திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக அரசுக்கு குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக...

புவியியல்-அரசியல் மாற்றக் கட்டம்: இந்தியா–ரஷ்யா தளவாட ஒத்துழைப்பு உடன்படிக்கை – விரிவான அறிக்கை

புவியியல்-அரசியல் மாற்றக் கட்டம்: இந்தியா–ரஷ்யா தளவாட ஒத்துழைப்பு உடன்படிக்கை – விரிவான...