பாம்பன் தூக்கு பாலத்தில் காலி ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் – ரயில்வே துறையின் அவசர ஆய்வு!

Date:

பாம்பன் தூக்கு பாலத்தில் காலி ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் – ரயில்வே துறையின் அவசர ஆய்வு!

டிட்வா புயலின் தாக்கத்தால் ராமேஸ்வரம் பகுதியில் வீசும் 50–65 கி.மீ. வேக சூறுக்காற்றை முன்னிட்டு, பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் ரயில்களை இயக்குவதற்கான பாதுகாப்பு ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக கடல்சீற்றம் அதிகரித்ததால், நேற்று முதல் ராமேஸ்வரம் நோக்கி செல்லும் ரயில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை காற்றின் வேகம் சிறிது குறைந்ததைத் தொடர்ந்து ரயில்வே துறையின் பொறியாளர்கள் முதலில் ரயில் இன்ஜினை மட்டும் பாலத்தில் இயக்கி பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர், பயணிகள் இல்லாமல் காலி பெட்டிகளுடன் ரயிலை ஓட்டி கூடுதல் சோதனையையும் மேற்கொண்டனர்.

பாலத்தின் பாதுகாப்பு நிலையை மதிப்பீடு செய்யும் இந்த சோதனையின் முடிவுகள் அடிப்படையில் ராமேஸ்வரம் ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக அரசுக்கு குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக...

புவியியல்-அரசியல் மாற்றக் கட்டம்: இந்தியா–ரஷ்யா தளவாட ஒத்துழைப்பு உடன்படிக்கை – விரிவான அறிக்கை

புவியியல்-அரசியல் மாற்றக் கட்டம்: இந்தியா–ரஷ்யா தளவாட ஒத்துழைப்பு உடன்படிக்கை – விரிவான...

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கைது – திமுக அரசை அண்ணாமலை கண்டனம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கைது – திமுக அரசை...

சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கடும் கேள்வி

சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம்...