• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஜூன் 5, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

நீதிபதி குற்றச்சாட்டு: “சென்னையில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை நானே வீடியோ எடுத்தேன்”

athibantv by athibantv
நவம்பர் 13, 2025
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை தானே வீடியோ எடுத்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர் என்ற நபர், மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கடந்த ஏப்ரல் 28க்குள் சாலைகள் மற்றும் பொதுஇடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற உத்தரவிட்டிருந்தார்.

அதோடு, அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சொந்தமான இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கொடிகளை வைக்கலாம் என்றும், ஆனால் சாலைகளின் நடுவே உள்ள சென்டர் மீடியன்கள் மற்றும் பாலங்களில் கொடிக்கம்பங்களை அமைக்கக் கூடாது என்றும் தெளிவாக கூறியிருந்தார். மேலும், பொதுக்கூட்டங்களின் போது தற்காலிகமாக வைக்கப்படும் ஒவ்வொரு கொடிக்கம்பத்திற்கும் ரூ.1000 கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட்டார்.

Related posts

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகல்: ராஜினாமாவை ஏற்றது டெல்லி தலைமை!

ஜூன் 5, 2026
திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் காங்கிரஸ் தோல்வி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் காங்கிரஸ் தோல்வி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

ஜூன் 5, 2026

இந்நிலையில், சட்டவிரோதமாக சாலையோரங்களில் கொடிக்கம்பங்களை அமைத்ததை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ் திலக் ஆகியோர், கொடிக்கம்பம் விவகாரம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, மாவட்ட வாரியாக அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ‘‘தமிழக அரசு உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் பாராட்டத்தக்கது. ஆனால் எந்தக் கட்சியும் நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடப்பதில்லை; அரசும் அதை முழுமையாக அமல்படுத்தவில்லை. சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினரே விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை நான் சுயமாக வீடியோ எடுத்துள்ளேன்,’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், அனுமதியின்றி சாலைகளில் கொடிக்கம்பங்களை அமைத்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொது இடங்களில் உள்ள சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்றிய விவரம் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கைகள் தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.

நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை மீறினால் தாமாகவே அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் தீர்க்க அலுவலர்கள் நியமனம் – பள்ளிக்கல்வி இயக்குநரக ஆணை

Next Post

டெல்லி செங்கோட்டை வெடி தாக்குதலுக்கு முன் 3 மணி நேரம் காரிலிருந்த உமர் முகமது — காரணம் என்ன?

Next Post

டெல்லி செங்கோட்டை வெடி தாக்குதலுக்கு முன் 3 மணி நேரம் காரிலிருந்த உமர் முகமது — காரணம் என்ன?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகல்: ராஜினாமாவை ஏற்றது டெல்லி தலைமை!

ஜூன் 5, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஜூன் 5, 2026
திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் காங்கிரஸ் தோல்வி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் காங்கிரஸ் தோல்வி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

ஜூன் 5, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகல்: ராஜினாமாவை ஏற்றது டெல்லி தலைமை!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் காங்கிரஸ் தோல்வி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகல்: ராஜினாமாவை ஏற்றது டெல்லி தலைமை!

ஜூன் 5, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஜூன் 5, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN