முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் திங்கள்கிழமையான இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த விவகாரம் அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருமே நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக, வழக்கின் விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் முக்கியக் காரணங்களால் தம்பதியினர் இருவரும் காணொலித் காட்சி (Video Conference) வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்புள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




