“திரைக் கவர்ச்சிக்கு பின்னால் ஓடுவது அறிவார்ந்த சமூகத்துக்கு பொருத்தமற்றது” – சீமான் விமர்சனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
“நடிகர்களின் பின்னால் செல்வது ஒரு ஆபத்தான பழக்கம். அறிவார்ந்த சமூகமாக தன்னைச் சொல்லிக்கொள்ளும் மக்கள், திரைக் கவர்ச்சிக்குப் பின்னால் ஓடுவது மிகவும் அசிங்கமானது.”
அவர் மேலும் கூறியதாவது:
“சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 1.25 கோடி வடஇந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும் பட்சத்தில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதிக்கப்படும். பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக இதற்கும் ஆதரவு தெரிவிக்கிறது.”
கரூர் நிகழ்வைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சீமான் விமர்சித்தார்.
“கரூரில் ஏற்பட்ட துயரச்சம்பவத்தில் தவெக மாவட்டச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சம்பவத்திற்கு நேரடியாக காரணமானவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திப்பது சரியானதல்ல,” என்றார்.
மேலும் அவர் கூறினார்:
“பாஜக கூட்டணியில் விஜயை சேர்க்கும் முயற்சிக்காகவே ஆதவ் அர்ஜுனாவை வெளியில் வைத்துள்ளனர். விஜய் கூட்டணியில் இணையவில்லை என்றால், அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படலாம்,” என்று சீமான் கடுமையாக விமர்சித்தார்.