உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் நலம் விசாரிப்பு!
சென்னை: விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக முன்னாள் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் ஜி அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சமூக நலத்துறைகளில் நீண்டகாலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றவர் வேதாந்தம் ஜி. தற்போது அவருக்கு ஏற்பட்ட வயது மூப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனைக்கு நேரில் சென்ற மோகன் பாகவத், வேதாந்தம் ஜி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவர் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர்.





