கிள்ளியூர் ஸ்ரீ பிராட்டீஸ்வரர் சிவன் கோவில் திருக்கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா – 2026
தமிழகத்தின் ஆன்மீகச் சிறப்பை பறைசாற்றும் வகையில், கன்யாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பிராட்டீஸ்வரர் சிவன் திருக்கோவிலில், புதிய விமான கலசம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
நாள்: 23-04-2026, வியாழக்கிழமை
யாகசாலை மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகள்:
காலை 09.30 மணி முதல்: திருவிழாவின் முக்கிய நிகழ்வான யாகசாலை பூஜைகள் தொடங்கும். இதில் வேதிகா அர்ச்சனை, அக்னி காரியம் மற்றும் மூல மந்த்ர ஜெப ஹோமங்கள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஸ்பரிஷாகுதி, நாடி சந்தணம், தசா தரிசனம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
யாகசாலைப் பூர்த்தியாக அஸ்த்ர ஹோமம், வசூர்தாரா ஹோமம், வஸ்த்ராகுதி, திரவ்யாகுதி மற்றும் மகா பூர்ணாகுதி நடைபெறும். அதன்பின் ராக மாலிகா இசையுடன் யாத்ரா தானம் செய்யப்பட்டு, புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சுவாமி சன்னதி நோக்கிப் புறப்படும்.
கும்பாபிஷேக நன்நேரம் (காலை 10.30 – 11.30 மணி): சப்தமி திதியும், புணர்தம் நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுபவேளையில், மூலாலய விமான கலசம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
மகா அபிஷேகம் மற்றும் வழிபாடுகள்:
மதியம் 12.00 மணி: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெறும்.
- பக்தர்களுக்கான வேண்டுகோள்: அபிஷேகத்திற்குத் தேவையான மஞ்சள் பொடி, களபம், பால், தயிர், கரும்பு சாறு, தேன், இளநீர், நெய், வில்வ இலை பொடி, அரிசி மாவு, தாமரை பூ பொடி, நெல்லிப்பொடி, சந்தணப்பொடி, பஸ்பம், பழவகைகள் மற்றும் பன்னீர் ஆகிய பொருட்களை வழங்க விரும்பும் பக்தர்கள், காலை 11.00 மணிக்குள் ஆலயத்தில் கொண்டு வந்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அபிஷேகம் நிறைவடைந்ததும், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்படும்.
நிர்வாகம் மற்றும் குருமார்கள்:
- ஆலய ஜோதிடர்: தேவிகோடு மடம், பிரசன்னதிலகம், வாஸ்து ஜோதிட நிபுணர் Dr. T.T. அதிபன்ராஜ் BBA., BA (Vastu) M.A. (தொடர்புக்கு: 9524020202). தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்.
- கும்பாபிஷேகம் நடத்துபவர் : சிவாகம கிரியா விசாரத்த கும்பாபிஷேக கலாரத்னம் ஸ்ரீ சிவ பத்ரகாளி அம்பிகா உபாசகர் வாமதேவ சிவம் சிவ ஸ்ரீ K. சிவபாலன் சுவாமிகள்.
இந்த மகா கும்பாபிஷேக நன்நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, ஸ்ரீ பிராட்டீஸ்வரர் சுவாமியின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.





