திமுக அரசின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்க முடியுமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!
முதலமைச்சர் ஸ்டாலின் நல்லவர் எனக் கூறி திமுக கூட்டணியில் உள்ள ஒருவர்கூட ஓட்டு கேட்கவில்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரதனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக கூட்டணியினர் கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்குச் செய்த நன்மைகளை முன்வைத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கதிரவன் மீது எழுந்த புகாரை, அது ‘கிட்னி திருட்டு’ அல்ல ‘கிட்னி முறைகேடு’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நியாயப்படுத்திப் பேசியதை அவர் கடுமையாகச் சுட்டிக்காட்டினார். மேலும், ஏரிக்குத் தண்ணீர் வரவில்லை என்று கேள்வி எழுப்பும் பொதுமக்களைப் பார்த்து திமுக வேட்பாளர் கதிரவன் ‘லூசு’ என்று பேசுவதாகவும் அண்ணாமலை சாடினார். கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதைப் பட்டியலிட்டுவிட்டு மக்களிடம் ஓட்டு கேளுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.




