ரூ.5000 கொடுத்து 5 லட்சம் கொள்ளையடித்த திமுக – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் சாடல்!
திமுக அரசு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் விஞ்ஞானபூர்வமாக ஒவ்வொருவரிடமும் தலா 5 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தனது உரையில் கடுமையாக விமர்சித்தார்.




