சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் அகில பாரத கோஷ் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சார்பில் அகில பாரத கோஷ் தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களை வாசித்து பக்தி இசையை எழுப்பினர். இதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த நிகழ்வு, பக்தி உணர்வையும் ஆன்மிக விழிப்புணர்வையும் அதிகரிக்கும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது