“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளை எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் கூட்டணி ஒற்றுமையை பேணி சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் உரியது.
தோல்வி கண்டவர்கள் எந்த விதத்திலும் மனச்சோர்வுக்கு இடம் தர வேண்டாம். எதிர்காலத்தில் நமக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. 2026 தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளன; வெற்றி, தோல்வி எது வரும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத சூழல் நிலவியது. இந்த நிலை நிலைத்திருக்காது; மாற்றமே நிரந்தரமானது என்பதால், நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றியம் முதல் கிளை நிலை வரை உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணியில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“மக்களின் தீர்ப்பே இறைவனின் தீர்ப்பு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



