கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்
கொடைக்கானல் அண்ணா பேருந்து நிலையத்தில் காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவி வருகிறது.
சமீப காலமாக கொடைக்கானல் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை ஊருக்குள் நுழைந்து நடமாடுவதுடன், விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், சில நேரங்களில் மனிதர்களை தாக்கியும் வருகின்றன.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்திலேயே காட்டெருமைகள் முகாமிட்டுள்ளதால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.