திருப்பூரில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நூதன போராட்டம்
பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் கோரி பாடை கட்டி ஒப்பாரி
திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுமையான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பாடை கட்டி ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
காலமுறை ஊதியம் வழங்குதல், பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் , அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.