மாணவிகளுக்கு தகாத நடத்தை: பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட பாதிரியாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
குன்னத்தூர் அருகிலுள்ள தேவாலய வளாகத்தில், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் தேவாலய பாதிரியாராகவும், தாளாளராகவும் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
மாணவிகளுக்கு அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.