திருவண்ணாமலையில் கட்டுப்பாடு இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலையில் அதிவேகமாக சென்ற ஆட்டோ ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் பயணித்த ஒரு வாகன ஓட்டியுடன் மோதிய பின்னர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டியரை தவிர்க்கும் முயற்சியில், ஆட்டோ ஓட்டுநர் வண்டியை திடீரென திருப்பியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், முதிய தம்பதி ஒருவருடன் இரண்டு கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் நான்கு பேர் கடுமையாக காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.