மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எச்.ராஜாவை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் – நலம் விசாரிப்பு

Date:

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எச்.ராஜாவை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் – நலம் விசாரிப்பு

உடல்நலக் கோளாறால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தபோது, எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும், தொடர்ச்சியான மருத்துவ கவனிப்பின் காரணமாக அவரது உடல்நிலை தற்போது சீரடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்று எச்.ராஜாவை சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...