ரோடு ஷோ விதிமுறைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் – தவெக மனு
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்கள் தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு விதிகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாநில அரசு வெளியிட்டுள்ள இந்த வழிமுறைகள், தேர்தல் ஆணையால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சாதகமாகவும், பதிவு செய்யப்பட்டிருந்தும் அங்கீகாரம் பெறாத அரசியல் அமைப்புகளுக்கு பாதகமாகவும் இருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை தவெக கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.