நில விவகாரம் உச்சத்தை எட்டியது – மூதாட்டரை இரும்புக் கம்பியால் தாக்கிய கும்பல்

Date:

நில விவகாரம் உச்சத்தை எட்டியது – மூதாட்டரை இரும்புக் கம்பியால் தாக்கிய கும்பல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே, நிலம் தொடர்பான தகராறில் முதியவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கராபுரத்தை அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் ஓய்வுபெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன், தனது வீட்டின் வெளியே ஒரு கழிப்பறையை அமைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த கழிப்பறை கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பாக, ரங்கநாதனுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாசிலாமணி என்பவருக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றியபோது, மாசிலாமணி ஆத்திரத்தில் கழிப்பறையை சேதப்படுத்தியதுடன், இரும்புக் கம்பியால் ரங்கநாதனை தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் ரங்கநாதனின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்திற்குப் பிறகு, மாசிலாமணி மற்றும் அவருடன் தொடர்புடைய சிலர் தலைமறைவாகி விட்டதாகவும், அவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: 133 பேர் உயிரிழப்பு

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: 133 பேர் உயிரிழப்பு பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த...

இந்தியா உலகத் தலைமை நாடாக உருவெடுக்க உதவும் பட்ஜெட்

இந்தியா உலகத் தலைமை நாடாக உருவெடுக்க உதவும் பட்ஜெட் உலக அளவில் அனைத்து...

தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை – நிதியமைச்சர் நிர்மலா...

தைப்பூச விழா – வடபழனி முருகன் ஆலயத்தில் குவிந்த பெருந்திரள் பக்தர்கள்

தைப்பூச விழா – வடபழனி முருகன் ஆலயத்தில் குவிந்த பெருந்திரள் பக்தர்கள் தைப்பூச...