கொடைக்கானலில் ரோப் கார் திட்டம் – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு
கொடைக்கானலில் ரோப் காரை செயல்படுத்தும் சாத்தியங்கள் குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
உலகளவில் பிரபலமான சுற்றுலாத்தலமாகக் கருதப்படும் கொடைக்கானலில், ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாபயணிகள் வருகை தருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக, வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோப் கார் சேவை அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை வல்லுநர்கள் ஆராய்ந்துள்ளனர்.