செக் திருப்பி வந்த வழக்கு: இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு வருடம் சிறை

Date:

செக் திருப்பி வந்த வழக்கு: இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு வருடம் சிறை

செக் மோசடி தொடர்பான வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இயக்குநர் லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 35 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடன் தொகையை நீண்ட காலமாக திருப்பிச் செலுத்தாமல் அவர் தாமதம் செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடன் திருப்பிச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் பணம் போதாமையால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி, பேஸ்மேன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் குமார் சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் லிங்குசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, லிங்குசாமி உள்ளிட்ட இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், வரும் இரண்டு மாதங்களுக்குள் வட்டியுடன் கடன் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலி!

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர்...

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலி!

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய...

“அரசு அலுவலகம் 4 நாள்… பள்ளிக்கு லீவு”: பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

"அரசு அலுவலகம் 4 நாள்... பள்ளிக்கு லீவு": பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள்...

திருப்பதியில் எல்.முருகன் – நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி பெற்றனர்!

திருப்பதியில் எல்.முருகன் - நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி...