பிரச்சினையை பேசித்தான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை குறித்து சீனா கருத்து

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நேட்டோ நாடுகள் சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு 50 முதல் 100 சதவீதம் வரையிலான வரி விதிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் ரஷ்யா–உக்ரைன் போர் முடிவுக்கு வரும். சீனா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கி வருகிறது; அதனால் கிடைக்கும் பணம் உக்ரைனில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கூடுதல் வரி விதிக்கப்பட்டால் சீனா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்” என்று ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து, ஸ்லோவேனியாவில் இருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான டன்ஜா பஜோன்-னை சந்தித்துப் பேசிய பின்னர் கூறியதாவது:

“வர்த்தகப் போரில் பங்கேற்பது சீனாவின் நோக்கம் அல்ல. பிரச்சினைக்கு தீர்வு அமைதி பேச்சுவார்த்தையில்தான் உள்ளது. சீனாவும் ஐரோப்பிய நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல; நட்பு நாடுகளாக இருக்க வேண்டும். மோதலுக்குப் பதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.”

Facebook Comments Box