ரேஷன் கடைகளில் நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெற்றுக்கொள்ளலாம்: அமைச்சர் தகவல்

வடகிழக்கு பருவமழை காலத்தில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று உணவு மற்றும் பொதுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

அறிக்கையில் அவர் கூறியதாவது:

“தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொதுப் திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாய் ஆகியவை அனைத்து நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படுகின்றன.

வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை ஏற்கனவே அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும். அதாவது, அக்டோபரில் 12–35 கிலோ அரிசி பெற்றவர்கள் மற்றும் இதுவரை பெறாதவர்கள் நவம்பர் மாத ஒதுக்கீடான 12–35 கிலோ அரிசியை இம்மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெறாதவர்கள் வழக்கப்படி நவம்பர் மாதத்தில் பெறலாம். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் இந்த வசதியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box