மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது –

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை (அக்டோபர் 13) மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 14 முதல் 16 வரை சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதேசமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது.

இன்றைய மழை அளவுகளில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 9 செ.மீ. மழை பதிவாகி அதிகபட்சமாக இருந்தது. சேலம், திருச்சி, கரூர், கடலூர், விருதுநகர், புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் 7 முதல் 8 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.

Facebook Comments Box