“என் மகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை” — வன்கொடுமை பாதிக்கப்பட்ட ஒடிசா மாணவியின் தந்தை வேதனை
மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகரில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசா மாணவி தந்தை, தனது மகளை மூலிய மாநிலம் ஒடிசாவிற்கு அழைத்து செல்ல அனுமதி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது, “இங்கு அவளுக்கு பாதுகாப்பு இல்லை; அவளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இந்த மாணவி, கடந்த அக். 10 மாலை தனது நண்பருடன் வெளியே சென்றார். அதற்கு பிறகு, இரவு 8.30 மணியளவில் திரும்பியபோது, ஒரு கும்பல் அவரை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தது. அவருடன் சென்ற ஆண் நண்பர் அங்கு இருந்து ஓடியுள்ளார்.
மாணவியின் தந்தை, மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “என் மகள் நடக்க முடியாமல் படுக்கையில் இருக்கிறார். முதல்வர், டிஜி, எஸ்பி, ஆட்சியர் அனைவரும் உதவி செய்து வருகிறார்கள். எனினும் இங்கு பாதுகாப்பு போதுமானது அல்ல; அதனால் நான் முதல்வரிடம் அவளை ஒடிசாவிற்கு அழைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்” என்று கூறினார்.
இந்த சம்பவத்தை ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி கடுமையாக கண்டித்து, “மேற்கு வங்கத்தில் நடந்த இந்தக் குற்றம் மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க காவல்துறை சம்பவத்தை விசாரித்து, மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளது. மாணவி தற்போது துர்காபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.