கரூர் சம்பவ எதிரொலி: தவெகவை தடை செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கரூர் சம்பவத்தின் பின்னணி காரணமாக, தவெக கட்சியை தடை செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், மின்னஞ்சல் மூலம் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் குறிப்பிடப்பட்டதாவது: 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தலைமைத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சி அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் சுமார் 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் கூட்ட நெரிசலான இடத்தில் கலந்து கொண்டனர்.

அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் சட்ட அனுமதிகளை மீறியதால், கூட்ட நெரிசலில் சிறார்களும், பெண்களும் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அதிகாரிகள் குழந்தைகள் மற்றும் பெண்கள் கூட்டத்தில் பங்கேற்பதை தடுக்க தவறியதற்கும் இதன் விளைவாக இந்த பலியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.

மனுவில் மேலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள விவரங்கள்: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்; இறந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

Facebook Comments Box