தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பின்படி, மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கக் கூடும்.

தென்னிந்தியப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஆக.15) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.

வரும் 16 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Facebook Comments Box