“மக்களுக்கான படமாக ‘டீசல்’ இருக்கும்” – ஹரிஷ் கல்யாண் நம்பிக்கை
ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டீசல்’ திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பில், தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்கும் இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது.
சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:
“ஆக்ஷன் படங்கள் மீது எனக்கு எப்போதும் விருப்பம் இருந்தது. அதற்கான சரியான கதைக்காகக் காத்திருந்தேன். ‘டீசல்’ அந்த வகையிலான படம்.
தங்கத்தை விட மதிப்புமிக்க எரிபொருள் உலகத்தின் பின்னால் நடக்கும் மாஃபியா உலகத்தை இந்த படம் வெளிக்கொணர்கிறது.
டிரெய்லர் பார்த்த பலரும், ஆக்ஷன் மீட்டரை சரியாக பிடித்திருக்கிறாய் என்று பாராட்டினர்.”
அவர் மேலும் கூறினார்:
“பெட்ரோல், டீசல் போன்ற எளிய மக்களின் வாழ்வைத் தொடும் பொருட்களின் பின்னால் இப்படி ஒரு குற்றவியல் வலயம் இருக்கிறதா என்பதைக் காட்டும் படம் இது.
மக்களுக்கான படமாக ‘டீசல்’ இருக்கும்.
இந்த படத்துக்காக 30 நாட்களுக்கு மேல் கடலில் ஷூட்டிங் செய்தோம். அதுல்யா ரவியும் சூழ்நிலையை நன்றாகப் புரிந்து நடித்தார்.
நல்ல படம் தர வேண்டும் என்பதே என் நோக்கம். தீபாவளிக்கு என் படம் வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.”