ஃபேஸ்புக்கில் இருப்பதை போன்று ட்விட்டரை பயன்படுத்தும் யூஸர்கள் விரைவில் ட்விட்களுக்கு எமோஜி ரியாக்ஷன்களை கொடுக்க ட்விட்டர் நிறுவனம் மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை ட்விட்களுக்கு ஹார்ட் மூலமாகவே ரியாக்ஷன் தெரிவிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ட்விட்டர் எடுத்து வரும் நடவடிக்கைகள் மூலம் இந்த ஃபேஸ்புக் யூஸர்கள் போலவே வித விதமான எமோஜிக்கள் மூலம் ட்விட்களுக்கும் ரியாக்ஷன் கொடுக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். ஏற்கனவே ட்விட்டர் சில மாதங்களுக்கு முன் எமோஜி ரியாக்ஷன்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. சில காரணங்களால் பின்னடைவை சந்தித்த 9 மாதங்களுக்குப் பிறகு, ட்விட்டர் மீண்டும் எமோஜி ரியாக்ஷன்களை சோதித்து வருவதாக தெரிகிறது. இந்த சோதனை முயற்சி அறிமுகமானால் டிவிட்டர் யூஸர்கள் சிரிக்கும் முகம் (ஹாஹா), ஆர்வத்தை வெளிப்படுத்தும் முகம், “சோகம்” மற்றும் “உற்சாகம்” , லைக்ஸ், சீர்ஸ், ஹூம் போன்ற பல கூடுதல் ரியாக்ஷன்களை சேர்க்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பல ரியாக்ஷன்களை யூஸர்கள் வெளிப்படுத்தி ட்விட்களுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் கோபத்தை வெளிப்படுத்தும் Angry emoji-க்கள் ஏதும் இந்த பட்டியலில் இல்லை என்று தெரிகிறது.ட்விட்டரின் போட்டி தளங்களான லிங்க்ட்இன், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் பலவற்றில் இதே போன்ற எமோஜி ரியாக்ஷன்கள் யூசர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் ட்விட்டர் யூஸர்களுக்கு பல ஆண்டுகளாக எமோஜிக்களை பயன்படுத்தி ரியாக்ட் செய்வது கனவாகவே உள்ளது. எனவே விரைவில் எமோஜி ரியாக்ஷன்களை எதிர்பார்த்து காத்திருப்பதாக ட்விட்டர் யூசர்கள் கூறி உள்ளனர்.

Twitter is working on Tweet Reactions view:

“Likes”, “Cheer”, “Hmm”, “Sad”, “Haha”

The icons for the Cheer and Sad reactions are WIP and shown as the generic heart one at the moment https://t.co/ZCBhH8z7JR pic.twitter.com/dGqq1CzIis

— Jane Manchun Wong (@wongmjane) May 28, 2021

https://platform.twitter.com/widgets.js

பயன்பாட்டு வாக்கெடுப்பின் ஸ்கிரீன் ஷாட்களின் அடிப்படையில், மூன்று வெவ்வேறு ரியாக்ஷன் தொகுப்புகளுக்கு இடையே தேர்வு செய்யுமாறு மக்கள் கேட்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தொகுப்பிலும் பெரும்பாலான விருப்பங்கள் (லைக், ஃபன்னி, சுவாரஸ்யம், சோகம்) என ஒரே மாதிரியான ரியாக்ஷன்கள் இருப்பதும் தெரிகிறது. இருப்பினும், ட்விட்டர் யூஸர்கள் இன்பாக்ஸ் என்றும் அழைக்கப்படும் நேரடி செய்திகளில் (DMs) எமோஜிகளை இன்னும் பயன்படுத்தலாம். மார்ச் மாதத்தில் ட்விட்டர் எமோஜிகளுடன் ரியாக்ஷன் மற்றும் டிஸ்லைக் / டவுன்வோட் பட்டன்ஸ் (dislike/ downvote buttons) பற்றி யூஸர்களின் விருப்பம் பற்றிய கணக்கெடுப்பை தொடங்கியது. டிஸ்லைக் / டவுன்வோட் பட்டன்ஸ் இவை இரண்டும் தனித்துவமானவை அல்ல, ஏனெனில் ரெடிட் யூஸர்களை டிஸ்லைக் செய்ய அனுமதிக்கிறது மற்றும் யூ டியூபின் கமெண்ட் செக்ஷன் டிஸ்லைக் பட்டனை கொண்டுள்ளது.
இருப்பினும், இந்த அம்சத்தின் வளர்ச்சி தற்போது தெளிவாக இல்லை. தவிர ட்விட்டர் நிறுவனம் விரைவில் ஒரு ரீடர் மோடை (Reader mode) சேர்க்கவும் திட்டமிட்டுள்ளது. அதே போல Chirp என்ற புதிய ஃபான்ட் ஃபேமிலியை ஸோதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. யூசர்களின் கூற்றுப்படி, ட்விட்டர் அதன் வலை பயனர்களுக்கு புதிய ஃபான்ட் ஃபேமிலியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளது.
Facebook Comments Box