மார்கழி மாத தொடக்கம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் விமரிசையான சிறப்பு பூஜை
மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் மிகுந்த பக்தியுடன் நடைபெற்றன.
இந்த விழாவையொட்டி, தங்கக்குறடு மண்டபத்தில் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, 30 திருப்பாவைகளை குறிக்கும் வகையில் தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட புடவை ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மூலவர் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் – ரெங்கமன்னார் முன்னிலையில், பக்தர்கள் குழுவாகத் திருப்பாவைப் பாடி வழிபாடு செய்தனர்.
இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, மார்கழி மாதத்தின் புனிதத்தைக் கொண்டாடினர்.