தேநீர் கடை தொழிலாளர் மீது போதை இளைஞர் தாக்குதல் — சிசிடிவி காட்சி பரபரப்பு!
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தேநீர் கடை தொழிலாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
கனகராஜ் நடத்தி வரும் தேநீர் கடைக்கு வந்த இளைஞர், போதையிலிருந்து பிஸ்கட் பாட்டிலை தட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கடையில் வேலை பார்க்கும் விஸ்வநாதன் கேட்டறிந்த போது, திடீரென கோபமடைந்த அந்த இளைஞர் அவர்மீது தாக்குதல் நடத்தினார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த சிசிடிவி காட்சி வெளியாக, அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. போலீசார் சம்பவத்திற்கான விசாரணையை தொடங்கியுள்ளனர்.