• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

இந்தியா–இஸ்ரேல் உறவு : பல நாடுகளின் பொறாமையை கிளப்பும் வலுவான கூட்டணி

athibantv by athibantv
நவம்பர் 30, 2025
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.3K 🔥 📋

இந்தியா–இஸ்ரேல் உறவு : பல நாடுகளின் பொறாமையை கிளப்பும் வலுவான கூட்டணி

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான நட்பு சமீப ஆண்டுகளில் முந்தையதை விட பல மடங்கு வலுவடைந்து வருகிறது. இரு நாடுகளின் உறவு புதிய படிநிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியைப் பொறுத்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவுடனான உறவு மிக உறுதியாக உள்ளது என்றும், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து தமக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். பியூஷ் கோயலை சந்தித்ததைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இரு நாடுகளும் வணிக, அரசியல் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026

2014 முதல் இந்தியாவிற்கு சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2016இல் இந்தியாவுக்கு வந்த இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லின், பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

2017ஆம் ஆண்டு, இந்திய கடற்படை இஸ்ரேல் உருவாக்கிய IUHDSS நீர்மூழ்கிக் கண்காணிப்பு அமைப்பை பயன்படுத்தத் தொடங்கியது. அதே ஆண்டில், பைதான் மற்றும் டெர்பி ஏவுகணை அமைப்புகளின் சோதனைகளில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும், இஸ்ரேலின் ஒருங்கிணைந்த எல்லை நிர்வாக அமைப்பு (CIBMS) இந்திய இராணுவத்தால் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இந்த அதிநவீன கண்காணிப்பு முறை இந்திய-பாகிஸ்தான், இந்திய-வங்கதேச எல்லைகளில் மொத்தம் 6,300 கி.மீ தூரம் அமைக்கப்பட்டுள்ளது. ஜூலை 4, 2017 அன்று மோடி இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமராக வரலாறு படைத்தார்.

இதை முன்னதாக 2003ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த ஏரியல் ஷரோன் இந்தியா வந்தது, ஒரு இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்த முதல் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018இலோ இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தியாவுக்கு விஜயம் செய்து பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

காசா மோதலின் போது, உலகளாவிய விமர்சனங்களைக் கருத்தில் கொள்ளாமல், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக நெதன்யாகுவை சந்தித்து மோடியின் ஆதரவைத் தெரிவித்தார். இதற்கு இணையாக 2024ல் நடந்த இந்தியா–பாகிஸ்தான் மோதலில், பெரும்பாலான நாடுகள் நடுநிலையாக இருந்த நிலையில், இஸ்ரேல் வெளிப்படையாக இந்தியாவுக்கு துணைநின்றது.

இஸ்ரேலின் முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டு வர பொருளாதார அமைச்சர் நிர் பர்கத் பல தொழிலதிபர்களுடன் இந்தியா வந்தார். மேக் இன் இந்தியா கொள்கையை விட முன்பே கூட, இந்தியா–இஸ்ரேல் வர்த்தக வளர்ச்சி உலகின் கவனத்தை ஈர்த்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு மிக அதிக அளவில் வலுப்பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பரில், இஸ்ரேல் நிதி அமைச்சர் ஸ்மோட்ரிச் இந்தியா வந்த போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலீட்டு–பாதுகாப்பு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாவின் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான நேரடி விமான சேவை தொடங்கும் வழியை வகுத்தது.

இதற்கிடையில், அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேலுக்குச் சென்று, எஃப்டிஏ, உள்கட்டமைப்பு, சுரங்கம், இந்திய தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள், இஸ்ரேலின் உணவுப் பாதுகாப்பு கொள்கை, விதை தொழில்நுட்பங்கள் போன்ற பல துறைகள் குறித்து கலந்துரையாடினார். இதன் மூலம், மோடி தலைமையில் இந்தியா மீதுள்ள நம்பிக்கையை இஸ்ரேல் மீண்டும் உறுதிப்படுத்தியது.

இஸ்ரேலின் புத்துணர்ச்சி தரும் தொழில்நுட்பமும், இந்தியாவின் பரந்த உற்பத்தித் திறனும் இயல்பாகவே புதிய கூட்டணியை உருவாக்குகின்றன என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். விரைவில் நெதன்யாகுவின் இந்திய பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே உருவாக்க 10 ஆண்டு குறிக்கோள்!

Next Post

விபத்து குறித்த தகவலை கேட்ட நபரை திடுக்கிடும் விதத்தில் திட்டிய போக்குவரத்து காவலர் – ஆடியோ வெளியீடு சர்ச்சை!

Next Post

விபத்து குறித்த தகவலை கேட்ட நபரை திடுக்கிடும் விதத்தில் திட்டிய போக்குவரத்து காவலர் – ஆடியோ வெளியீடு சர்ச்சை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026
உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!
  • உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN