கோவை மாவட்டத்தில் நடைபெற்ற S.I.R முகாமில் முறைகேடு சம்பவத்தில் தட்டிக்கேட்ட அதிமுக உறுப்பினர்களை திமுக மாமன்ற உறுப்பினர் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் சிலர் போலி வாக்காளர்களை சேர்த்து உண்மையான வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட அதிமுக வினரை, 62-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரேவதி-யின் கணவர் முரளி, மதுபோதையில் மிரட்டி தகராறு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவுடன், பூத் லெவல் அலுவர்களாக திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.